Thu. Dec 1st, 2022

மக்கள் நீதி மய்யம் வெளியிட்ட வாழ்த்து செய்தி “இந்திய மாற்றுத்திறனாளிகளுக்கான கிரிக்கெட் அணியின் கேப்டனாக மதுரையைச் சேர்ந்த சச்சின் சிவா தேர்வு செய்யப்பட்டுள்ளது பெரிதும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக, இந்திய அணியின் கேப்டன் பதவிக்குத் தேர்வு செய்யப்படும் முதல் தமிழக வீரர் சச்சின் சிவா என்பது கூடுதல் சிறப்பு.

இந்த அணியில் பல ஆண்டுகளாக ஆல்-ரவுண்டராக விளையாடி வரும் சிவா, கடந்த 3 ஆண்டுகளாக துணைக் கேப்டனாகப் பொறுப்பு வகித்தார். தனது வியத்தகு விளையாட்டால் தற்போது கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ள இவரது தலைமையிலான இந்திய அணி, வெற்றிகளைக் குவித்து, தேசத்துக்குப் பெருமை தேடித்தர வேண்டும்.

துபாய் போட்டியில் பங்கேற்க மநீம தலைவர் கமல்ஹாசன் உதவியுடன் சென்ற அணி, வெற்றி வாகை சூடியது. அந்த அணியில் இடம் பெற்றிருந்த சச்சின் சிவா, தற்போது இந்திய அணிக்கே கேப்டனாகி இருப்பது பெருமைக்குரியது. விடாமுயற்சி, தன்னம்பிக்கையால் உயர்ந்துள்ள சச்சின் சிவா, மென்மேலும் வளர வாழ்த்துகிறோம்.”

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.