Thu. Dec 1st, 2022

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 22 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 2 ல் இடம்பெற்ற தென்னாப்பிரிக்கா அணியும் பங்களாதேஷ் அணியும் மோதின. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 205 ரன்கள் எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ரிலீ ரோசோவ் 109 (56), குயின்டன் டி காக் 63 (38) ரன்கள் எடுத்தனர். பங்களாதேஷ் அணியில் ஷகிப் அல் ஹசன் 2விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

158 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 16.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 101 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.

தென்னாப்பிரிக்கா அணி 104 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

Hits: 1

Leave a Reply

Your email address will not be published.