Thu. Dec 1st, 2022

உலகநாயகன் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றி விழாவை ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனம் வெகுவிமர்சையாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் 100-வது நாள் வெற்றி விழா நவம்பர் 7-ஆம் தேதி கலைவாணர் அரங்கில் நடைபெறுகிறது.

விக்ரம் படத்தின் தயாரிப்பாளர்களான திரு. கமல்ஹாசன் அவர்களும் திரு. ஆர். மகேந்திரன் அவர்களும் ஒருங்கிணைந்து நடத்தும் இந்த வெற்றிவிழாவில், விக்ரம் படத்தில் பங்களிப்பாற்றிய நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள், வினியோகஸ்தர்கள். தியேட்டர் உரிமையாளர்கள் உள்பட அனைவரும் கௌரவிக்கப்பட இருக்கின்றனர்.

Hits: 9

Leave a Reply

Your email address will not be published.