நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 19 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற இலங்கை அணியும் ஆஸ்திரேலியா அணியும் மோதின. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 156 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக பதும் நிசாங்கா 40 (45), சரித் அலங்கா 38 (25) ரன்கள் எடுத்தனர்.
157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி அணியின் மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியால் 16.3 ஓவரில் 3 விக்கெட்டை இழந்து 158 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோனிஸ் 59 (18) ரன்கள் எடுத்தார்.
Hits: 11