Fri. Apr 19th, 2024

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராத் கோஹ்லி. நேற்று நடந்த பாகிஸ்தானுக்கு அணிக்கு எதிரான டி20 ஆட்டத்தில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.

நேற்று நடந்த போட்டியில் விராத் கோஹ்லி 82 (53) ரன்கள் எடுத்திருந்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் (24,212) அதிக ரன்கள் எடுத்த 6 வது வீரர் என்ற புதிய சாதனையை படைத்துள்ளார்.

விராத் கோஹ்லி நேற்று நடந்த போட்டியையும் சேர்த்து மொத்தம் 24,212 ரன்கள் எடுத்துள்ளார். மொத்தம் 24,212 ரன்களை 528 போட்டிகளில் 53.80 சராசரியில் 71 சதமும், 126 அரைசதங்களும் அடக்கம். மேலும் இவரது அதிகபட்ச ரன் 254*.

சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில சச்சின் தெண்டுல்கர் 34,357 ரன்களும், இரண்டாவது இடத்தில இலங்கை அணியை சேர்ந்த குமார் சங்ககரா 28,016 ரன்களும், மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ரிக்கி பாண்டிங் 27,483 ரன்களும், நான்காம் இடத்தில் இலங்கை அணியை சேர்ந்த மஹேலா ஜெயவர்த்தேனே 25,957 ரன்களும், ஐந்தாம் இடத்தில் தென்னாப்பிரிக்கா அணியை சேர்ந்த கல்லிஸ் 25,534 ரன்கள் எடுத்து உள்ளார்.

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *