Thu. Dec 1st, 2022

நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் 15 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற இலங்கை அணியும் அயர்லாந்து அணியும் மோதின. டாஸ் வென்ற அயர்லாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய அயர்லாந்து அணி 20 ஒவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் எடுத்தது. அயர்லாந்து அணியில் அதிகபட்சமாக பால் ஸ்டிர்லிங் 34 (25), ஹர்ரி டெக்டர் 45 (42) ரன்கள் எடுத்தனர். இலங்கை அணியில் தீக்சனா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

129 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி அணியின் தொடக்க வீரர்களின் அதிரடியால் 15 ஓவரில் 1 விக்கெட்டை இழந்து 133 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. இலங்கை அணியில் அதிகபட்சமாக குஷால் மெண்டிஸ் 68 (43) ரன்கள் எடுத்தார்.

Hits: 9

Leave a Reply

Your email address will not be published.