நடைபெற்றுவரும் ஐசிசி ஆடவர் டி20 உலகக்கோப்பை 14 வது ஆட்டத்தில் சூப்பர் 12 க்ரூப் 1 ல் இடம்பெற்ற இங்கிலாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக இப்ராஹிம் சட்ரன் 32 (32) ரன்கள் எடுத்திருந்தார். இங்கிலாந்து அணியில் சாம் காரன் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி 18.1 ஓவரில் 5 விக்கெட்டை இழந்து 113 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக லியாம் லிவிங்ஸ்டோன் 29 (21) ரன்கள் எடுத்தார்.
Hits: 4