Fri. Apr 19th, 2024

கிரேட் இண்டியன் கிச்சன், tappad பாணியில் #Ammu குடும்ப வன்முறைக்கெதிரான படம். திருமணம் முடிந்து நீண்ட நாட்களுக்கு பின்னர் வீட்டுக்கு வந்திருக்கும் அம்மாவிடம், கணவன் தன்னை அடித்ததாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி சொல்லும் போது ‘உன் அப்பா என்னை அடித்த போது என் அம்மா சொன்னதை சொல்கிறேன்’ எனச் சொல்கிற காட்சி, பல தலைமுறைகளாக பெண்கள் குடும்ப வன்முறையை திருமண வாழ்வில் ஒரு அங்கமாக கருதிக்கொண்டு வாழும் நிலையை #AMMU அழுத்தமாக பதிவு செய்கிறது.

இது பற்றி நாளை உன் மகளிடம் நீ என்ன சொல்ல போகிறாய்? என அதே அம்மா கேட்கிற இடத்தில் வேகமெடுத்து, அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்க வேண்டிய படம் மீண்டும் அதே வன்முறையை ஏற்றுக்கொள்ளும் படி சுழல்வது, Domestic violenceக்கு எதிராக சட்ட நடைமுறைகளை பேசாமல், கணவரை பழிவாங்கும் வெளிக்குள் நின்றது என கொஞ்சம் குறைகளையும், கருக்கலைப்பில் பெண்களுக்குரிய உரிமையை பேசுவது போன்ற நிறைகளையும் சமமாக கொண்ட கதையாகவும், இத்தகைய கதைகள் நிச்சயம் சொல்லப்பட வேண்டியவை என்பதாலும், அம்முவை வரவேற்கலாம்.

Visits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *