Wed. Apr 24th, 2024

தூத்துக்குடி துப்பாக்கி சூடு கலவரம் தொடர்பாக ஜெகதீசன் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது ” எந்தப் பக்கமிருந்தும் உதவி வருவதற்குரிய அறிகுறிகள் எதுவும் இல்லா நிலையில் காவல் துறை, வருவாய்த்துறை மற்றும் அரசு இயந்திரம் முற்றிலும் வெறும் பார்வையாளராக இருந்த நேரத்தில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் மற்றும் தனியார் மருத்துவமனை ஆம்புலன்ஸ் ஆகியோர் புரிந்த முன்மாதிரி மனிதாபிமானச் சேவைகள் இந்த ஆணையத்திடமிருந்து சிறந்த பாராட்டு பெறத் தகுந்தவை ஆகும். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், நல்லதம்பி மருத்துவமனை மற்றும் சில தனியார்கள் குறிப்பிட்ட நேரத்தில் தன்னிச்சையாகவும், தன்னார்வத்துடனும் வந்து உதவியும் சேவையும் செய்திருக்காத நிலையில் நிலைமை மிகவும் மோசமாகி மேலும் பல உயிர்களை இழக்க வேண்டி இருந்திருக்கும். மொத்த சூழ்நிலையும் மோசமாகி, மக்கள் பீதியடைந்து தங்களது உயிரைக் காத்துக் கொள்வதற்காக தப்பி ஓடி, ஒழுங்குமுறை முற்றிலுமாக சீர்குலைந்து, அரசு இயந்திரம் முடங்கி, அங்கு குழப்பமாகவும், கலவரமாகவும் ஆன அந்தச் சூழ்நிலையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகமும் பொதுமக்களில்ஒருவரான திரு.P.செந்தில்குமார் (ம.சா.422) என்பவரும் தங்களது உயிர் அல்லது உறுப்புகளுக்கு நேர இருந்த ஆபத்தையும் பொருட்படுத்தாமல் சிறப்பாக செயல்பட்டனர்.”

Visits: 11

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *