Fri. Mar 29th, 2024

பங்களாதேஷ் அணி நியூசிலாந்து அணியுடன் டி20 போட்டியில் இன்று மோதியது. டாஸ் வென்ற பங்களாதேஷ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கன்வே 64 (40) ரன்களும், கிளென் பிலிப்ஸ் 60 (24) ரன்களும் எடுத்தனர்.

209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 160 ரன்கள் எடுத்து 48 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. பங்களாதேஷ் அணியில் ஷாகிப் அல் ஹசன் 70 (44) ரன்கள் எடுத்தார். நியூசிலாந்து அணியில் ஆடம் மில்னே 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Visits: 2

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *