Thu. Dec 1st, 2022

ஆசியா கோப்பை 2022 மகளிர் கிரிக்கெட் தொடரில் 21 வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இலங்கை அணியுடன் மோதியது. டாஸ் வென்ற இலங்கை அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இலங்கை அணி 18.5 ஒவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 112 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியில் அதிகபட்சமாக அதபத்து 41 (26) ரன்கள் எடுத்தார். பாகிஸ்தான் அணியில் ஓமைமா சோஹைல் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

113 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 18.5 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 113 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.