இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் தென்னாப்பிரிக்கா அணி இன்று இந்தியாவுடன் மூன்றாவது 50 ஓவர் கிரிக்கெட் போட்டி டெல்லியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 27.1 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் மட்டுமே எடுத்தது. தென்னாப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக ஹென்ரிச் கிளாசென் 34 (42) ரன்கள் எடுத்தார். இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 4 விக்கெட் எடுத்திருந்தார்.
100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.1 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 105 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பில் கில் 49 (57) ரன்களும், ஷ்ரேயாஸ் ஐயர் 28 (23) எடுத்தனர்.
Hits: 14