Thu. Dec 1st, 2022

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி அவர்கள் கூறியதாவது ” பா.ஜ.க. ஆட்சியில் இந்தியாவின் ஆட்சி மொழியாக இந்தியை திணிக்கிற முயற்சியின் வெளிப்பாடாகத் தான் அலுவல் மொழி பற்றிய நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை அமைந்துள்ளது. இந்த முயற்சிகளை தீவிரப்படுத்துகிற பணியில் ஈடுபட்டுள்ள ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

இந்தியா பலமொழிகள் பேசுகிற பன்முகத்தன்மை கொண்ட நாடு. வேற்றுமையில் ஒற்றுமை கண்டு கடந்த 75 ஆண்டுகளாக இந்திய ஜனநாயகம் காப்பாற்றப்பட்டு வருகிறது. இந்த அடிப்படையை தகர்க்கிற விஷயத்தில் பாஜக அரசு தொடர்ந்து செயல்படுமேயானால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்.

பிரதமர் மோடி இதில் தலையிட்டு இத்தகைய நடவடிக்கைகளை திரும்பப் பெற தவறினால் கடுமையான போராட்டத்தை தமிழகத்தில் நடத்த வேண்டிய நிலை ஏற்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். “

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.