Thu. Mar 28th, 2024

நாட்டுப்புற தெய்வங்களின் கதைகள் அதையொட்டிய பூர்வீக தெய்வ வழிபாடு கலாச்சாரங்கள் வழியாக ஒடுக்கப்பட்ட/பழங்குடி மக்களின் உரிமைகளை பேசும் கதையாடல்கள் பார்வையாளர்களுக்கு நெகிழ்ச்சியளிக்கும் fantasy genre அம்சமாக இருக்கின்றன. #Kantara திரைப்படம் அதைத்தான் அழகாக செய்திருக்கின்றன.

இந்த நாட்டுப்புற தெய்வங்கள் மீட்டுருவாக்கம் சமீபத்தில் மாரி செல்வராஜின் கர்ணன் திரைப்படத்தில் சொற்ப காட்சிகளில் நிகழ்ந்ததை நாம் நினைவில் இருத்தலாம். கந்தாரா கன்னட திரைப்படத்தில் அது இன்னும் நீட்சியடைந்து முழுமையான நாடகமாக நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

வனம்தான் கதைக்களம் என்பதே அலாதியானது. அதில் பழங்குடி மக்களின் அரசியல் மற்றும் வனத்தில் அவர்களுக்கு இருக்கும் உரிமையை நேர்மையாக பேசுகிற இத்தகைய படங்கள் உணர்வூப்பூர்வமாக இன்னும் அழகாக மிளிர்கின்றன. வனத்தை அதன் இயல்பில் வைத்திருக்க முயலும் வன அதிகாரியாக கிஷோரும்,

வனத்தின் பூர்வக்குடியாக வாழும் நாயகனான ரிஷப்பிற்கும் ஒரே நோக்கம் ஆனால் பாதைகள் வேறு வேறாக இருக்கின்றன. இவர்களுக்கு நடுவில் நிலப்பிரபுவாக வரும் வில்லனுக்குமான சூழ்சிகளாக நீள்கிற திரைப்படம் அதன் கிளைமாக்ஸில் பார்வையாளர்களுக்கு உச்சகட்ட பரவசத்தை அளிக்கின்றது.

இறுதிக்காட்சிக்காக மெனக்கெடலுடன் மலைவாசி மக்களின் நாட்டுபுற வழிபாட்டு சடங்கான ‘கோலா’ ஆட்டத்தை உடல்மொழியில் சிரத்தையுடன் கொண்டுவந்த ரிஷப் ஷெட்டி வெகுவான பாராட்டுதலுக்குரியவர். அது சிலிர்ப்பான தருணங்களைத் தரும் படங்களின் பட்டியலில் இப்படத்தை சேர்த்திருக்கின்றது.

   - தோழர் கருணாசக்தி

Visits: 34

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *