Wed. Feb 28th, 2024

ஆசியா கோப்பை 2022 மகளிர் கிரிக்கெட் தொடரில் 13 வது டி20 ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி இந்தியா அணியுடன் மோதியது. டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய பாகிஸ்தான் அணி 20 ஒவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக நிடா தார் 56 (36) ரன்கள் எடுத்தார். இந்திய அணியில் தீப்தி ஷர்மா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

138 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 19.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 124 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது.

இதன்மூலம் பாகிஸ்தான் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Visits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *