Thu. Dec 1st, 2022

2016 ஆம் ஆண்டில் கடற்கரை தாது மணல் கனிமங்களை அணு கனிம வகையாக ஒன்றிய அரசு சேர்த்தது. இந்த கனிமங்களில் மோனோசைட் ஒரு அணு கனிமமாகும். அதிலிருந்து அணு எரிபொருளான தோரியம் பிரித்தெடுக்கப்படுகிறது. தோரியம் இந்தியாவின் அணுசக்தி திட்டத்திற்கான முதல் ஆதாரமாகும். ஒன்றிய அரசு தேச பாதுகாப்பை காத்தில் கொண்டு தாது மணல் கனிமங்கள் எடுக்கவும் ஏற்றுமதி செய்யவும் தனியாருக்கு தடை விதிக்கப்படுவதாக கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒன்றிய அரசு அறிவித்தது.

தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, ஒடிசா போன்ற மாநில அரசுகள் தாது மணல் எடுக்க தனியாருக்கு விடப்பட்டிருந்த குத்தகையை ஒன்றிய அரசு ரத்து செய்தது.

இந்நிலையில் ஒன்றிய அரசு கடந்த மே மாதம் 25ஆம் தேதி தாது மணல் எடுக்க தனியாரையும் அனுமதிக்கும் வகையில் கனிம வள அமைச்சகம் சட்ட முன்னுரை கொண்டு வந்தது. இந்த சட்ட முன்னுரை மாநில அரசாங்கத்தின் உரிமையை பறிக்க உள்ளது.

ஒன்றிய அரசின் இந்த சட்ட திருத்தத்திற்கு காரணமாக கூறப்படுவது கௌதம் அதானியின் அதானி குழுமம் கடற்கரை தாது மணல் தொழிலில் கால் பதிக்க இரண்டு நிறுவனங்களை ஆரம்பித்துள்ளது. அந்த நிறுவனங்கள் ஆந்திர பிரதேசத்தில் அல்லுவியல் ஹெவிமினாரஸ் லிமிடெட் மற்றும் ஒடிசாவில் பூரி நேஷனல் ரிசோர்ஸ் லிமிடெட் என்ற இரண்டு நிறுவனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்த சட்டதிருத்தத்தால் அதானி போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் மட்டுமே தாது நிறுவனங்கள் தொழிலில் கால் பாதிக்க முடியும்.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.