Fri. Mar 29th, 2024

அமரர் கல்கி எழுதி மாபெரும் வரவேற்பை பெற்ற நாவல் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் கதை சோழர்களுக்குள் நடந்த கதை. மொத்தம் ஐந்து பாகங்களை கொண்ட நாவலை இயக்குநர் மணிரத்னம் அவர்கள் இரன்டு பாகங்களாக எடுத்துள்ளார். அதில் முதல் பாகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது.

பொன்னியின் செல்வன் முதல் பாகத்தில் நடக்கும் கதையானது சோழ வம்சத்தின் அடுத்த மன்னனாக வரவேண்டிய ஆதித்தகரிகாலன் ( விக்ரம் ), வந்தியத்தேவன் (கார்த்திக்), பெரிய வேளார் ( பிரபு ), பார்த்திபேந்திர பல்லவன் ( விக்ரம் பிரபு ) உடன் இணைந்து ஒவ்வொரு நாடக கைப்பற்றிக்கொண்டே நாட்டிற்கு திரும்பாமல் செல்கிறார். தனது தந்தைக்கு எதிராக சதி நடப்பதை அறிந்து கொள்ளவும், தனது தங்கை குந்தவையை (திரிஷா) சந்திக்க வந்தியத்தேவனை தனது வாலை கொடுத்து அனுப்புகிறார் ஆதித்தகரிகாலன்.

கடம்பூர் மாளிகையில் சுந்தர சோழரை (பிரகாஷ் ராஜ் ) நீக்கிவிட்டு அவரது பெரியப்பா மகன் மதுராந்தக சோழரை ( ரகுமான் ) மன்னர் ஆக்க அரசியல் சதி பெரிய பழுவேட்டையரால் (சரத்குமார்) ஏற்பாடு செய்யப்படுகிறது. அதனை கண்ட வந்தியத்தேவன் அந்த தகவலை கூற மன்னரிடம் செல்லும் வழியில் ஆழ்வார்க்கடியான் நம்பியை ( ஜெயராம்) சந்திக்கிறார். ஆழ்வார்கடியான் சந்தித்த பின் செல்லும் வழியில் நந்தினியை (ஐஸ்வர்யா ராய்) சந்தித்து அவர் தன்னை அரண்மனையில் வந்து சந்திக்க மோதிரம் ஒன்றை வந்தியத்தேவனிடம் கொடுக்கிறார்.

அரண்மனை வந்ததடைந்த வந்தியத்தேவன் மன்னரை சந்திக்கும் முன் சின்ன பழுவேட்டையாரிடம் (பார்த்திபன்) மாட்டி அங்கிருந்து தப்பித்து சுந்தர சோழரிடம் அவருக்கு எதிராக நடக்கும் சதியை தெரிவித்த பின் நந்தினியை அரண்மனையில் சந்திக்கும் வந்தியத்தேவனை தனது பக்கம் இழுக்க ஆசை வார்த்தைகளை கூறியும் பிடிகொடுக்காமல் அங்கிருந்து கிளம்பும் வந்தியத்தேவன் குந்தவையை சந்திக்கிறார்.

குந்தவை வந்தியத்தேவனுக்கு ஒரு வேலை கொடுக்கிறார். ராஜராஜசோழனை அரண்மனைக்கு வர சொல்லி ஓலை ஒன்றை குந்தவை கொடுத்து அனுப்புகிறார். ராஜராஜசோழனை கொள்ள பாண்டிய ஆபத்துதவிகளும் இலங்கை செல்கின்றனர். பாண்டிய ஆபத்துதவிகளுக்கு பெரிய பழுவேட்டையரின் மனைவி நந்தினி துணையாக இருக்கிறார்.

இந்தச் சூழலில் அடுத்து என்ன நடக்கிறது என்பதுதான் ‘பொன்னியின் செல்வன்’ முதல் பாகம்.

மணிரத்னம் தான் மிக சிறந்த இயக்குநர் என்பதை மேலும் மேலும் ஒவ்வொரு காட்சிகளிலும் நிரூபிக்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களின் இசைதான். ஒளிப்பதிவு, கலைஇயக்கமும் மிகப்பெரிய பலம்.

எல்லா நடிகர்களும் அவர்களின் பங்கை உணர்ந்து நடித்துள்ளனர். வந்தியத்தேவனாக கார்த்தி காதல் காட்சிகளில் கலக்கியுள்ளார். பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமி சிறப்பாக நடித்துள்ளார்.

திரையரங்கில் பார்த்து கொண்டாட வேண்டிய திரைப்படம் பொன்னியின் செல்வன் பாகம் 1.

Visits: 21

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *