Sat. Nov 26th, 2022

ஆஸ்திரேலியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியா அணியுடன் முதல் டி20 போட்டி குயின்ஸ்லாந்து மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஒவரில் 9 விக்கெட்டுகளை இழந்து 145 ரன்கள் எடுத்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிகபட்சமாக கைல் மேயர்ஸ் 39 (36) ரன்களும், ஓடியன் ஸ்மித் 27 (17) ரன்களும் எடுத்தனர். ஆஸ்திரேலியா அணியில் ஜோஷ் ஹேசில்வுட் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 19.5 ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ரன்கள் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 58 (53) ரன்களும், மேத்யூ வேட் 39 (29) ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஷெல்டன் காட்ரெல் 2 விக்கெட்டுகளும், அல்சாரி ஜோசப் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.