Thu. Dec 1st, 2022

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் வெளியிட்ட அறிக்கை “இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை வங்கிகளின் வளர்ச்சியிலும்,மக்கள் சேவையிலும்,வணிகத் தொடர்பாளர்களின் பங்கு மிக மிக இன்றியமையாதது.

ஏழை, எளிய மக்களுக்கும்,மிகவும் பின்தங்கிய கிராமப்புற மக்களுக்கும் வங்கிச் சேவை கிடைப்பதில்,வணிகத் தொடர்பாளர்கள் திறம்பட செயலாற்றியுள்ளனர்.
முதியோர் உதவித்தொகை, ஈழத்தமிழர்கள் அகதி முகாம்,பிற அகதிகள் மறுவாழ்வு உதவித்தொகை,வராக்கடன், புதியகடன்,புதிய நகை கடன்,ஆகியவை குறிப்பிடத்தக்கவை.

நஷ்டத்தில் இயங்கி கொண்டிருந்த இந்தியன் ஓவர்சீஸ் வங்கியை, வணிகத் தொடர்பாளர்கள் தங்களின் அயராது உழைப்பினால் இலாபகரமான வங்கியாக மாற்றியுள்ளனர்.

கொரோனா காலத்தில் வணிகத் தொடர்பாளர்கள், தங்களின் உயிரையும் பொருட்படுத்தாமல், மக்களுக்கு சிறந்த சேவை ஆற்றியுள்ளனர்.

இந்நிலையில், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி நிர்வாகத்தின் கீழ் தமிழ்நாடு முழுவதும் பணியாற்றி வந்த 3400க்கும் மேற்பட்ட வணிகத் தொடர்பாளர்களை, தற்போது குறிப்பிட்ட தனியார் நிறுவனப் பணியாளர்களாக மாற்ற வங்கி நிர்வாகம் முடிவெடுத்திருப்பது, அவர்களின் வாழ்வில் விழுந்த மாபெரும் பேரிடியாகும்.

எனவே, ஒன்றிய பாஜக அரசு, இந்தியன் ஓவர்சீஸ் உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளில் பணியாற்றி வரும் வணிகத் தொடர்பாளர்களைத் தனியார் நிறுவனத்தின் ஊழியர்களாக மாற்றும் வங்கி நிர்வாகத்தின் முடிவைக் கைவிட வேண்டும். வங்கியின் நேரடிக் கட்டுப்பாட்டிலேயே பணியாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.”

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.