Fri. Mar 29th, 2024

பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் அவர்கள் பிரதமர் மோடியை கடுமையாக சாடி வெளியிட்ட அறிக்கை “இந்தியாவின் வளர்ச்சியை கெடுப்பது “சூழலியல் செயல்பாட்டாளர்களாம்”,அவர்கள் “Urban Naxals”ஆம். -மோடி. உலகம் முழுவதும் காலநிலை மாற்றம் ஏற்படுத்தக்கூடிய பேரிடர்களை சந்திக்க காடுகளின் பரப்பளவை அதிகரிக்கவேண்டும் என்று நடவடிக்கைகளை மேற்கொள்ளும் போது, இந்தியா மட்டும், “ஆத்மநிர்பார் பாரத்” என்கிற பெயரால் மத்திய இந்தியாவில் 1,75,000 ஹெக்டர் காடுகளை சுரங்க பணிகளுக்காக ஒதுக்கியவருக்கு, சூழலியல் செயல்பாட்டாளர்களை குறை சொல்வது மக்கள் விரோதமானது. அதுசரி, “We have only changed, Climate has not Changed” என்று சொன்ன பிரதமருக்கு சூழலியல் செயல்பாட்டாளர்கள் எல்லாம் தப்பாகதான் தெரியும். இன்னொருபக்கம் தன்னுடைய சொந்த மாநிலத்தில் புதிதாக அணுவுலைகளை அமைக்க மக்கள் போராடியதை ஏற்றுக்கொண்டு கைவிட்டவர், தமிழகத்தில் அணுவுலைகளை வேண்டாம் என்றால் அவர்களை “அர்பன் நக்சல்” என்பதிலிருந்தே அவர் தமிழ் மக்களை எந்தளவிற்கு மதிக்கிறார் என்பதை புரிந்துகொள்ளலாம். உண்மையில் யார் “அர்பன் நக்சல்கள்”? மக்களுக்கு சொந்தமான இயற்கை வளங்களை பன்னாட்டு நிறுவனங்களுக்கு தாரைவார்ப்பவர்களே மக்கள் விரோதிகள், அர்பன் நக்சல்கள். அதைகாக்க போராடுபவர்கள் மக்கள் நலனை காப்பவர்கள். “

Visits: 8

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *