இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் மூன்றாவது டி20 போட்டி ஐதராபாத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 20 ஒவரில் 7 விக்கெட்டுகளை இழந்து 186 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக கிரின் 52 (21) ரன்களும், டிம் டேவிட் 54(27) ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
187 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் விராத் கோலி 63 (48) ரன்களும் , சூர்யகுமார் யாதவ் 66 (39)ரன்களும், ஹர்திக் பாண்டியா 25(16) தனது கடைசி கட்ட அதிரடியால் இந்தியா 19.5 ஓவரில் 187 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
Hits: 13