தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் நிறுவனர் பெ.ஜான்பாண்டியன் MA அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” தலைவர் கோவை காந்திபுரத்தில் நேற்றைய தினம் இரவு, பெட்ரோல் குண்டு வீச்சு மற்றும் ஒப்பனக்கார வீதி பகுதியில் உள்ள தனியார் துணிக்கடை மீது மண்ணெண்ணெய் (Kerosene) குண்டு வீச்சு சம்பவம், 100 அடி சாலையில் உள்ள தனியார் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, அதேபோல குனியமுத்தூர் பகுதியில் சாலையோரத்தில் உள்ள காரில் பெட்ரோல் ஊத்தி தீ வைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற செயல்கள் மிகவும் வருத்தமளிக்கிறது.
இத்தகைய சம்பவங்கள் கோவை மாநகர பகுதியில் மக்கள் மிகவும் அச்சத்தில் உள்ளனர், அதுமட்டுமல்லாமல் பொள்ளாச்சியில் இரண்டு ஆட்டோ, ஒரு கார் உள்ளிட்ட வாகனங்களை உடைத்து சேதப்படுத்திய சம்பவம், மேட்டுப்பாளையத்தில் இரண்டு கடைகள் மீது பெட்ரோல் குண்டு வீச்சு, சம்பவத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் ஈடுபட்டுள்ளனர்.இதுபோன்ற சம்பவத்தை கயவர்கள் மீது காவல்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கோவை மாவட்டத்தில் இத்தகைய குற்ற சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், கோவை மாநகரில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் எதிரொலியாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். என கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்கள் கூறியுள்ளார். மேலும் கூடுதல் டி.ஜி.பி திரு.தாமரை கண்ணன் அவர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு, விரைவில் குற்றவாளிகளை கைது செய்துவிடுவோம் என்று காவல்துறை கூறியுள்ளார்கள்.
கடந்த 2 தினங்களில் 3 வெவ்வேறு இடங்களில் கோவை நகரில் பெட்ரோல் குண்டு வீசபட்டுள்ளது. அதற்க்கு காரணம் என்னவென்று ஆராய்ந்தால் பல இடங்களில் சோதனைச்சாவடி இல்லாத காரணமே! அதைப்போல மாநகர பகுதியில் முக்கியமான இடங்களில் (சிசிடிவி) கண்காணிப்பு கேமராக்கள் இல்லாத காரணத்தினால் இதுபோன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுகின்றன. மாநகர காவல் ஆணையர் அவர்களும், கூடுதல் டி.ஜி.பி அவர்களும் பொதுமக்களின் நலன் கருதி உடனடியாக பதற்றம் நிலவிய பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைத்திட வேண்டும்.
இதனை தமிழக அரசு சிறப்பு கவனம் கொண்டு, கோவை மாநகர பொதுமக்களின் பதட்டத்தை தணிக்கவும், பொது மக்களிடம் அச்சத்தை போக்கவும், கோவை மட்டுமல்லாது தமிழகம் அமைதி பூங்காவாக நிலவிடவும், இதுமாதிரியான சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க உண்மை குற்றவாளிகளை கண்டறிந்து கைது செய்து கடுமையான தண்டனை வழங்கிட வேண்டும்! இதுபோன்ற குற்றச்சம்பவங்கள் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து தமிழக காவல்துறை இரும்பு கரம்கொண்டு தடுத்திடவேண்டும்.என்று தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.”
Hits: 24