Thu. Apr 25th, 2024

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலியா அணி 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்திய அணி ஆஸ்திரேலியா அணியுடன் இரண்டாவது டி20 போட்டி நாக்பூரில் நடந்தது. டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

மழையின் காரணமாக ஆட்டம் 8 ஓவராக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 8 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 90 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா அணியில் அதிகபட்சமாக வடே 43 (2) ரன்களும், பின்ச் 31 (15) ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அக்சர் படேல் 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

91 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் ரோஹித் சர்மா 46 (20) , தினேஷ் கார்த்திக் தனது கடைசி கட்ட அதிரடியால் இந்தியா 7.2 ஓவரில் 92 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

Visits: 5

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *