பாகிஸ்தான் சென்றுள்ள இங்கிலாந்து அணி 7 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டி20 ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டம் கராச்சியில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதலில் பேட்டிங்கில் களமிறங்கிய இங்கிலாந்து அணி 20 ஒவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 199 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மொயின் அலி 55(23) ரன்களும், டக்கெட் 43 (22) ரன்களும் எடுத்தனர். பாகிஸ்தான் அணியில் தஹானி 2 விக்கெட்டும், ஹரிஸ் ரவுஃப் 2 விக்கெட்டும் கைப்பற்றினர்.
200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணியில் தொடக்க வீரர்கள் இங்கிலாந்து அணியை துவம்சம் செய்தனர். அந்த அணியில் முஹம்மத் ரிஸ்வான் 88 (51), பாபர் அசாம் 110(66) அதிரடியால் 19.3 ஓவரில் 200 ரன்கள் எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி20 போட்டிகளில் இரண்டாவது முறையாக பாகிஸ்தான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
Hits: 6