Tue. Sep 27th, 2022

தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் Dr. PTR . பழனிவேல் தியாகராஜன் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் அவர்கள் கூறியதாவது “மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் சீரிய தலைமையில் , அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் செயல்பட்டு தேவையில்லாத செலவுகளை கட்டுப்படுத்தி தமிழ்நாட்டின் நிதிப் பற்றாக்குறை , வருவாய் பற்றாக்குறை , கடன் மற்றும் வட்டி வளர்ச்சி குறைக்கப்பட்டுள்ளது :

வருவாய் பற்றாக்குறை 2021-22 திருத்தப்பட்ட மதிப்பீட்டை விட இரண்டு மடங்கு குறையும் நிலை உருவாகியுள்ளது ,

அதேபோல 2021-22 பட்ஜெட்டில் 4.61 % ஆக மதிப்பிடப்பட்ட நிதிப் பற்றாக்குறை 3.25 – 3.35 % அளவிற்கு குறையும் நிலை உருவாகி உள்ளது.

மறுபுறம் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்ததன் மூலம் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 54.70 % வளர்ச்சியையும் , வரி அல்லாத வருவாய் 74.70 % வளர்ச்சியையும் பெற்றுள்ளது . அதேசமயம் ஒன்றிய அரசின் ஜிஎஸ்டி வருவாய் 37 % வளர்ச்சியையும் , நிகர வருமான வரி வருவாய் 23 % வளர்ச்சியை மட்டுமே பெற்றுள்ளது .

வருவாய் பற்றாக்குறை கடன் ஆகியவற்றை ஒருபுறம் குறைத்து மறுபுறம் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும்போது சாதாரணமாக இத்தகைய சூழலில் பணவீக்கம் அதிகரிக்கும் . ஆனால் பொது விநியோகம் திட்டம் போன்ற அவசியமான செலவுகளை அதிகரித்ததனால் பிற மாநிலங்களைக் காட்டிலும் தமிழ்நாட்டில் மிகவும் சிறப்பான அளவிற்கு பணவீக்கம் ( விலைவாசி உயர்வு ) கட்டுப்படுத்தப்பட்டுள்ளது .

ஒன்றிய அரசின் புள்ளி விவரங்களின்படி நுகர்வோர் விலை பணவீக்கத்தின் இந்திய சராசரி 7 % ஆனால் தமிழ்நாட்டின் பணவீக்கம் 5.1 % மட்டுமே.”

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.