Tue. Sep 27th, 2022

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி ” தமிழக அரசியல் களத்தில் சேடப்பட்டியார் என மதிப்புடன் அனைவராலும் அழைக்கப்படும் தமிழ்நாடு சட்டப்பேரவையின் முன்னாள் தலைவர் சேடப்பட்டி திரு . முத்தையா அவர்கள் உடல்நலக் குறைவால் மறைந்த செய்தியறிந்து மிகவும் துயருற்றேன் .

நான்கு முறை சட்டப்பேரவை உறுப்பினராகவும் , இரண்டு முறை நாடாளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட சேடப்பட்டி திரு . முத்தையா அவர்கள் , தமிழ்நாடு சட்டப்பேரவையின் தலைவராக 1991 – 1996 ஆண்டுகளில் பணியாற்றியுள்ளார் .

கடந்த 2006 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் முன்னிலையில் கழகத்தில் தம்மை இணைத்துக் கொண்ட சேடப்பட்டி திரு . முத்தையா அவர்கள் , அப்போது முதல் , கழகத்தின் வளர்ச்சிக்காகவும் , மேன்மைக்காகவும் தொடர்ந்து பங்காற்றி வந்தார் .

அண்மையில் மதுரை சென்றிருந்த போது , உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேடப்பட்டி திரு . முத்தையா அவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து வந்தேன் . எனினும் , சிகிச்சை பலனின்றி அவர் மறைவுற்ற செய்தி , தற்போது வந்தடைந்து வேதனையைத் தந்துள்ளது . அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் , கழக உடன்பிறப்புகளுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் . “

Hits: 20

Leave a Reply

Your email address will not be published.