தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுதியுள்ள கடிதம் ” இலங்கை கடற்படையினரால் 20.09.2022 அன்று புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 8 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதையும் , அவர்களின் விசைப்படகு பறிமுதல் செய்யப்பட்டதையும் மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதாகவும் , இதுதவிர ஏற்கெனவே 95 மீன்பிடி படகுகளும் , 11 மீனவர்களும் இலங்கை அரசின் கட்டுப்பாட்டில் உள்ளனர்.
அண்மையில் 12 தமிழக மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதில் வெளியுறவுத் துறை அமைச்சகம் எடுத்த ஒருங்கிணைந்த முயற்சிகளுக்கு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்ளும் அதேவேளையில் , கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களின் மீன்பிடிப் படகுகளையும் விரைவில் விடுவிக்க உரிய தூதரக நடவடிக்கைகள் வாயிலாக தீவிர முயற்சிகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். “
Hits: 8