Fri. Dec 1st, 2023

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள் அறிக்கை ” வங்கக்கடலில் கோடியக்கரை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த ஜெகதாப்பட்டினம் மீனவர்கள் 8 பேரை, அவர்களின் படகுகளுடன் சிங்களக் கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைந்துள்ளனர். சிங்களப் படையினரின் இந்த அத்துமீறல் கடுமையாக கண்டிக்கத்தக்கது ஆகும்!

ஏற்கனவே கைது செய்யப்பட்ட மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டதற்கு அடுத்த இரு நாட்களில் மீண்டும் மீனவர்கள் கைது செய்யப்படுவது வாடிக்கையாகி வருகிறது. கடந்த 7-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 12 மீனவர்கள் சில நாட்களுக்கு விடுதலையான நிலையில் அடுத்த கைது அரங்கேறியிருக்கிறது!

வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதால் மீனவர்கள் அச்சத்திற்கு ஆளாகியிருக்கின்றனர். மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதற்கு நிரந்தர தீர்வு காண ஒன்றிய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

சிங்களப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 மீனவர்களையும், இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட சுமார் 100 படகுகளையும் விடுவிப்பதற்கு ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்! “

Hits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *