Sat. Oct 1st, 2022

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ அவர்கள் மாமன்னன் திரைப்படத்தின் பெரும்பகுதி படப்பிடிப்பு நடந்த சேலம் ஜருகுமலை பகுதி மேம்பாட்டிற்கு தனது பெயரிலான அறக்கட்டளை வாயிலாக, அரசு பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க ரூ.13.60 லட்சத்திற்கான காசோலையையும், மலைப்பாதையில் அமைக்கப்படவுள்ள 10 Convex Mirror-யையும் அதிகாரிகளிடம் வழங்கினார்.

மேலும் படப்பிடிப்பின் போது கோரிக்கை மனு அளித்த ஜருகுமலையில் வசிக்கும், இளைஞர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள், மாற்றுத் திறனாளி பெண்ணுக்கு மளிகை கடை வைக்க மளிகை பொருட்கள் & மாணவர்கள்-கைம்பெண்கள்-திருநங்கைகள் & மாற்றுத் திறனாளிகள் என மொத்தம் 55 நபர்களுக்கு உதவி தொகையும் இன்று வழங்கினார்.

Hits: 0

Leave a Reply

Your email address will not be published.