Sat. Nov 26th, 2022

FMP :
ஒரு நிலத்தின் புலப்பட விவரங்கள் வருவாய்த்துறையால் வழங்கப்படும் ஒரு ஆவணமாகும். அந்த ஆவணத்தில் நிலத்தின் நிலத்தின் அளவு, புல எண், எந்த மாவட்டம் , எந்த தாலுகா , எந்த கிராமம், நன்செய் நிலம் or புன்செய் நிலம் என அனைத்து குறிப்புகளும் கொண்டது.

FMP டவுன்லோட் செய்வது எப்படி:

  • தமிழ்நாட்டு அரசின் சார்பில் செயல்படும் https://eservices.tn.gov.in என்ற இணையதள பக்கத்திற்கு செல்ல வேண்டும்.

  • இணையதள பக்கத்திற்கு சென்று FMP (புலப்பட விவரங்கள் ) பார்வையிட என்று உள்ளதை கிளிக் செய்யவேண்டும்.

  • கிளிக் செய்தவுடன் அதில் கேட்கப்படும் தகவல்களான எந்த மாவட்டம், வட்டம்,கிராமம் என்பதை சரியாக உள்ளிட வேண்டும்.

  • மேலும் புல எண் அல்லது பட்டா எண்ணை சரியாக உள்ளிட வேண்டும். கட்டத்தில் காமிக்கப்படும் captcha வை சரியாக உள்ளிட்ட பின் சமர்ப்பி பட்டனை அழுத்த வேண்டும்.

  • திரையில் FMP தோன்றும் அதனை பிரிண்ட் எடுத்துக்கொள்ளலாம் அல்லது சேமித்து வைத்து கொள்ளலாம்.

Hits: 6

Leave a Reply

Your email address will not be published.