Thu. Oct 6th, 2022

தமிழக மக்கள் முன்னேற்றக்கழகம் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” இந்திய விடுதலைப் போரில் ஆங்கிலேயர்களை எதிர்த்து தீரத்தோடு களமாடிய முதல் தற்கொலைப் படைதளபதியாகயும், வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத்தளபதியாக இருந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் சுந்தரலிங்க குடும்பனார் அவர்களின் 223ஆம் ஆண்டு நினைவு நாளில், அவரின் தியாகத்தை நினைவு கூர்ந்து போற்றுவோம்.
மேலும்,தமிழக சட்டப் பேரவையில் இந்திய சுதந்திர போராட்ட வீரர் “மாவீரன் சுந்தரலிங்கனாரின்” திருஉருவ படமும், தலைநகர் சென்னையில் முழுவுருவ வெண்கல சிலையும் நிறுவிடவும், இந்திய பாராளுமன்றத்தில் திருஉருவ படமும் இடம்பெற்றிட வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் மத்திய,மாநில அரசை வலியுறுத்துகிறோம். “

Hits: 145

Leave a Reply

Your email address will not be published.