Thu. Dec 1st, 2022

சென்னையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேட்டியில் கூறியதாவது ” போதைப் பொருள் பயன்பாட்டை தடுத்து நிறுத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

போதைப்பொருள் விற்பனையை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தாலும், விற்பனை தொடருகிறது; ஒன்றிய அரசு இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் வழியாகவே ஏராளமான போதைப்பொருள்கள் இந்தியாவுக்குள் வருகின்றன!

குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில் மட்டும் ஏராளமான போதைப்பொருள்கள் பிடிபட்டுள்ளது

போதைப்பொருள் விற்பனை அதிகரிப்பதற்கு ஒன்றிய அரசும் காரணம்; ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியாவுக்குள் போதைப்பொருள் கடத்தி வருவதை தடுக்க ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்”

குஜராத் நீதிபதி ஒருவரே அந்த மாநிலத்தில் போதைப்பொருள் விற்பனை அதிகமாக இருப்பதை குறிப்பிட்டுள்ளார்; விற்பனையை தடுக்க முந்தரா துறைமுகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்துமாறு நீதிபதி அறிவுறுத்தி உள்ளார்.

Hits: 9

Leave a Reply

Your email address will not be published.