Sat. Sep 24th, 2022

காவல்துறையில் உதவி ஆய்வாளர் ட்ரைனிங் முடிக்கும் அதிகாரிகளுக்கு மேலதிகாரி ஒவ்வொருவருக்கும் ஒரு முடிவு தெரியாத வழக்குகளை விசாரிக்க அவர்களே அந்த வழக்குகளையும் தேர்வு செய்ய சொல்கிறார். அருள்நிதி கண்ணை மூடிக்கொண்டு ஒரு வழக்கை தேர்வு செய்கிறார். ஊட்டியில் நடந்த கொலை கொள்ளை பற்றிய வழக்கு வருகிறது.

வழக்கை விசாரிக்க ஊட்டி வரும் அருள்நிதிக்கு காதலியும் கிடைக்கிறார். வழக்கை எல்லா வகையிலும் துப்பு துலக்க முயல்கிறார். ஆனால் எந்த துப்பும் கிடைக்காமல் அல்லல்படும் அருள்நிதி வழக்கை விசாரிக்கையில் ஒரு பேருந்தில் ஏறும்போது கதை சூடுபிடிக்கிறது.

அந்த பேருந்தில் பயணிக்கும் பயணிகள் யார் அவர்களுக்கும் அருள்நிதி விசாரிக்கும் கொலை கொள்ளை சம்பவத்திற்கும் 13 நம்பர் கொண்டை ஊசி வளைவில் நடக்கும் அமானுஷ்ய சம்பவங்களுக்கும் இரண்டாம் பாதியில் ஒவ்வொரு விடையாக பதில் கிடைக்கிறது.

முதல் படத்திலேயே டைரக்டர் இன்னாசி பாண்டியன் ஸ்கோர் செய்துள்ளார். அருள்நிதி தன் பங்குக்கு நடிப்பில் வெளுத்து கட்டுகிறார். நடிகை பவித்ரா மாரிமுத்து கதாநாயகியாக கச்சிதமாக நடித்துள்ளார். இசையும் படத்திற்கு பக்கபலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் தரமான ஹாரர் திரில்லர் படம் “டைரி”

Hits: 21

Leave a Reply

Your email address will not be published.