மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சிபிஐஎம் சு.வெங்கடேசன் எம்.பி அவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் பற்றிய அறிக்கை ” மதுரையில் தொழில் வளத்தை பெருக்க வட அமெரிக்க தமிழ்சங்கப் பேரவையின் விழாவிற்கு சென்றிருந்த போது அங்கு தமிழர்கள் நடத்தும் மென்பொருள் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகளை சந்தித்து அவர்களுடைய “டெவலப்மெண்ட சென்டரை” மதுரையில் அமைக்க கோரிக்க வைத்தேன்.
அதனை ஏற்றுக்கொண்டு மதுரைக்கு வருவதாக ஒத்துக்கொண்டுள்ளார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக முதல்வரை சந்தித்து மதுரையில் “டைடல் பார்க், மற்றும் சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்தேன்.
இரு மாதங்களுக்கு முன் மதுரை வந்த முதல்வரிடம் மதுரை தொழில் முனைவோர்களோடு ஒரு சந்திப்பு – உரையாடல் நடத்த முதல்வர் இசைவு தெரிவிக்க வேண்டும் என்று கோரியிருந்தேன்.
கடந்த மூன்று நாட்களாக, நிதிதுறை செயலர், தொழில் துறை செயலர், தொழில் முதலீட்டு வழிகாட்டி நிறுவனத்தின் (Industrial Guidance) மேலாண்மை இயக்குனர் & முதலமைச்சரின் தனிச்செயலாளர்களையும் சந்தித்து கோரிக்கை வைத்துள்ளேன். ஆவண செய்வதாக உறுதியளித்துள்ளனர்.
மேலும் மாசு ஏற்படுத்தாத உற்பத்தி தொழில்களை ஊக்கப்படுத்த “காற்றாலைக்கான உதிரி பாகங்கள்”, சிறுகுறு தொழில்களை துவங்க தேவையான கட்டமைப்புகளை ஏற்படுத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. “
Hits: 2