Tue. Sep 27th, 2022

தோழர் கருணா சக்தி அவர்களின் விமர்சன பார்வை

ரோட்டில் இருக்கிற குழியால் சாமானியனுக்கு அநீதி நிகழ்கிறது. குழிக்கு காரணகர்த்தாவாக இருக்கும் அரசியல்வாதியிடம் கேட்டால் பெரும்பாலும் ‘கேஸ் குடுக்க போறியா? குடு பாக்கலாம்’ என்பதாகவே பதிலிருக்கும். அப்படியொரு வழக்கில் அதிகாரத்திற்கு எதிராக சமராடும் சாமானியன் கதைதான்.

சாமானியர்களுக்கு நீதி வழங்கும் இந்திய நீதிமன்ற வழக்காடல்கள் முறைகளை நாம் அதீத சோகத்துடன் ஜெய்பீமில் பார்த்தோம். அதற்கு அப்படியே நேர்மாறாக பல இயல்பான நகைச்சுவைக் காட்சிகளுடன் Nna than case kodu வில் மேலும் இன்னொரு அற்புதமான கோர்ட் டிராமாவை தரிசிக்கின்றோம்.

நாந்தா கேஸ் கொடு ஜெய்பீம்’ஐ காட்டிலும் ஒருபடி மேல் எனச் சொல்லலாம். ஏனெனில், சாமானியனுக்கு வழங்கப்படும் அநீதி வழக்காடல்கள் அதிகபட்சம் அதிகாரிகளுக்கு மட்டும் தண்டனைகள் வழங்குவதில் நின்று போய்விட, இந்தப்படம் அரசியல்வாதியுட்பட அனைவரையும் தண்டிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துகிறது.

உண்மையில் இதை இந்திய நீதிமன்றங்களில் ஒருபோதும் செய்திடாது என்பதாலும், திரையில் நிகழ்த்தப்படும் இந்த ஆச்சர்யமான அற்புத நீதி வழங்குதல் அறத்துடன் நிகழ்வதாலும் நாம் இப்படத்தை இன்னும் தீவிரமாக நேசிக்கத் துவங்குகிறோம்.

ஒரு சாலை விபத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் வரைக்கும் இருக்கும் குற்றப்பங்கை முன்வைத்த விதமும், அவர்களுக்கு எவ்வாறு பங்கு வருகிறது என பல சாட்சியங்களின் வழியே துல்லியமாக அடுக்கப்பட்ட கதையாடல் நேர்த்தியும் இந்த திரைப்படத்தை ஒரு முக்கியமான political drama வாக நிறுத்துகிறது.

வழக்கமாக தமிழர்களை தரக்குறைவாக சித்தரிக்கும் இதர மலையாள படங்களிலிருந்து விலகி இத்திரைப்படம் கைமாறு செய்திருக்கிறது. படத்தில் தமிழராக வரும் நாயகி காயத்திரியை அறத்துடனும், வைராக்கியத்துடனும் வாழும் பெண்ணாக அழகாகச் சித்தரித்திருப்பது கூடுதல் சிறப்பு. நடிகை காயத்ரி நடிப்பு சூப்பர்.

Hits: 120

Leave a Reply

Your email address will not be published.