Thu. Oct 6th, 2022

தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் எம்.எல்.ஏ அவர்கள் அறிக்கை “தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர வாய்ப்பு இருப்பதாக வெளியாகியிருக்கும் தகவல் அதிர்ச்சியளிக்கிறது.

சுங்கச்சாவடி என்பதே பகற்கொள்ளை தான். ஒப்பந்த நிறுவனங்கள் போட்ட பணத்தை சில ஆண்டுகளிலே இலாபத்துடன் திரும்ப எடுத்துவிட்ட பிறகும்கூட தொடர்ந்து பல ஆண்டுகளுக்கு கட்டண வசூலுக்கான அனுமதி வழங்கப்பட்டுவருவதென்பது ஏற்றுக்கொள்ள முடியாது.

எனவே, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 28 சுங்கச்சாவடிகளில் செப்டம்பர் 1 முதல் சுங்க கட்டணம் உயர்த்தும் முடிவை ஒன்றிய அரசும், தேசிய நெடுஞ்சாலைத் துறையும் திரும்ப பெற வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது. “

Hits: 5

Leave a Reply

Your email address will not be published.