Tue. Sep 27th, 2022

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்ட இரங்கல் செய்தி ” பிரபல பேச்சாளரும் தமிழ்நாட்டின் முதுபெரும் தலைவர்களுடன் நெருங்கிப் பழகியவருமான ‘ தமிழ்க்கடல் ‘ நெல்லை கண்ணன் அவர்கள் மறைவெய்தினார் என்றறிந்து மிகவும் வருத்தமுற்றேன் .

கடந்த ஆண்டு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வழங்கிய காமராசர் கதிர் விருது பெற்ற பெரியவர் நெல்லை கண்ணன் அவர்கள் , விழா மேடையிலேயே என்னிடம் வாஞ்சையொழுக அன்பு பாராட்டிப் பேசியதை இப்போதும் நினைந்து நெஞ்சம் நெகிழ்கிறேன் .

‘ தமிழ்க்கடல் ’ திரு நெல்லை கண்ணன் அவர்களின் தமிழ்ப் பங்களிப்பைப் போற்றும் வகையில் 2021- ஆம் ஆண்டுக்கான தமிழ் வளர்ச்சித் துறையின் இளங்கோவடிகள் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

அவரது இலக்கிய அறிவில் செறிந்த , பழகுதற்கினிய நெல்லை கண்ணன் அவர்களை இழந்து தவிக்கும் குடும்பத்தாருக்கும் , தமிழுலகினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன் . “

Hits: 7

Leave a Reply

Your email address will not be published.