Thu. Oct 6th, 2022

படத்தின் ஆரம்பகாட்சியில் சிறுவன் விருமன் தனது தாய் தற்கொலைக்கு காரணமான தனது தந்தை பிரகாஷ்ராஜை கொலை செய்ய கத்தியுடன் விரட்டுகிறார். பின்னர் கோர்ட்டில் தனது தந்தையை கொல்லமால் விடமாட்டேன் சபதம் எடுக்கும் விருமன் தனது தாய்மாமன்களான ராஜ்கிரண், கருணாஸ் அரவணைப்பில் வளர்கிறார். தனது தந்தை பிரகாஷ்ராஜ் மீதான ஆத்திரம் குறையாமல் பெரியவனாக வளர்கிறார் விருமன். ஊரில் நடக்கும் மல்யுத்த போட்டியில் வென்று பிரகாஷ்ராஜுக்கு மேலும் ஆத்திரத்தை ஊட்டுகிறார். ஒவ்வொரு தடவையும் தந்தையுடன் மோதல் போக்கை கடைபிடிக்கிறார். தந்தையுடன் மோதல், அண்ணன்களுடன் பாசம், அதிதியுடன் காதல் என அனைத்து இடங்களிளும் கார்த்தி ஸ்கோர் பண்ணுகிறார். இறுதியில் விருமனுக்கும் தந்தைக்கும் நடந்த மோதலில் பகை வென்றதா ? பாசம் வென்றதா? என்பதே கதை.

பாடல்களில் ஆட வைக்கிறார் யுவன்.
சூரி,சிங்கம் புலி படத்தை கலகலப்புடன் நகர்த்த உதவி இருக்கிறார்கள்.

எந்த புதுமையும் இல்லாத வழக்கமான திரைக்கதை,
அயர்ச்சியை தந்தாலும் படம் உணர்த்த வருகிற உயர்ந்த காரணத்திற்காக விருமனை ஒருமுறை காணலாம்.

Hits: 24

Leave a Reply

Your email address will not be published.