சனாதன கும்பலுக்கு கண்டனம் தெரிவித்து விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” சனாதன சங்கத்துவ கும்பலின் சதித் திட்டம் என்ன என்பதை தொடர்ந்து அம்பலப்படுத்தி வருகிறோம். அதனை அவர்களே இன்று உறுதிப்படுத்தியுள்ளனர். இந்து ராஷ்ட்ராவுக்கான புதிய அரசமைப்புச் சட்டத்தின் வரைவு தயாராகிவிட்டதென அறிவித்துள்ளனர். இதன்படி, இந்திய தலைநகரம் காசி எனும் வாரணாசியில் அமையும்…அங்கே மதங்களின் பாராளுமன்றம் கட்டப்படும். ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் நடைமுறையிலிருந்த சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் செல்லாததாகும். முஸ்லீம்கள் கிறித்தவர்களுக்கு வாக்குரிமை இருக்காது. வர்ணாஸ்ரம தர்மப்படியே ஆட்சி நிர்வாகம் நடக்கும். அகண்டபாரதம் எதிர் காலத்தில் அமைக்கப்படும். “
Hits: 13