ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் நவாஸ்கனி அவர்கள் அறிக்கை ” மாண்புமிகு தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அவர்களை தாக்க முயன்ற பாஜகவினரின் அராஜக அரசியல் கண்டனத்துக்குரியது. அமைதி பூங்காவான தமிழகத்தில்,ரவுடிகளையும், வன்முறையாளர்களையும் கட்சியில் சேர்த்து வன்முறையில் ஈடுபடும் பாஜகவின் அடாவடிப்போக்கை அரசு இரும்பு கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். தேசியக்கொடி பொருத்தப்பட்ட வாகனத்தின் மீது செருப்பை எரியும் பாஜக,
மற்றவர்களுக்கு தேசபக்தி குறித்து பாடம் எடுப்பது பெரும் அவமானகரமானது.
இவர்களின் தேசபக்தி என்னவென்பதை நாடறியும், அதனை மீண்டும் ஒருமுறை இன்று நிரூபித்து விட்டார்கள். ஒரு மாநில நிதி அமைச்சரையே தாக்கத் துணியும் பாஜகவினரின் இத்தகைய நடவடிக்கை முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும். “
Hits: 6