Thu. Apr 25th, 2024

வாங்க அறிவியல்_பேசுவோம் எனும் தலைப்பின் கீழ் முனைவர் தேவி PhD அவர்களின் கட்டுரை

நிறைய காரமான சாப்பாடு சாப்பிட்டா ulcer வந்துடும்.
வயித்த பட்டினி போடாத ulcer வந்துடும்ன்னு நாம் பெரும்பாலான நேரங்களில் கேட்டிருக்கிறோம்.

1982வரை நமது உணவு முறையால் தான் ulcer வருகின்றது எனும் கருத்து பரவலாக நிலவி வந்தது.

ஆனால் மார்ஷல் மற்றும் வாரன் எனும் இரு மருத்துவர்களின் ulcer தொடர்பாக வெளியிட்ட 1982ல் ஆய்வுகள் இந்த உலகத்திற்கு வேறு ஒரு உண்மையை பறைசாற்றின. Dr. வாரன் தனது ஆய்வகத்தில் ulcer நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடல் திசுமாதிரிகளில் இருந்து ஒரு வளைந்த சூழல் (spiral) வடிவ பாக்டீரியாவை கண்டறிகிறார். நோயின் தீவிரமும் பாக்டீரியாவின் எண்ணிக்கையும் நேர்மறைத் தொடர்பில் இருப்பதையும் (postive correlation) காண்கிறார். முதலில் அந்த பாக்டீரியாவின் தன்மை குறித்து ஆராய அதை ஆய்வகத்தில் வளர்ப்பது சிரமமாய் இருந்தாலும் பின் இரு மருத்துவர்களும் அதில் வெற்றி பெறுகின்றனர்.

அதுவே ஹெலிகோபாக்டர் பைலோரி (H. pylori) பாக்டீரியா.

இங்கே தான் அடுத்த கேள்வி வருகிறது:

ulcer நோயுடையவர்களின் வயிற்றில் H. pylori இருப்பதனாலேயே H. pylori தான் அந்த நோயை உண்டாக்குகிறது என்பதை எப்படி நிரூபிப்பது.
As we always say “correlation is not causation”.

ஏற்கனவே ulcer வந்து பாதிக்கப்பட்ட பலவீனமான வயிற்று செல்கள் H. pylori வளர ஏதுவான சூழ்நிலையை உருவாக்கித்தந்திருக்கலாம் இல்லையா? பின் எப்படி H. pylori நோய்க்காரணியாய் ஆகும்.

இங்கே தான் Dr. மார்ஷலின் ஒப்பற்ற, அபாயகரமான தியாகம் பங்காற்றுகின்றது.

ஒரு நோயாளியின் வயிற்றிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டு ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட H. pyloriயை தன் உடலில் செலுத்திக்கொள்கிறார். அவருக்கும் சில நாட்களில் ulcer நோயும் தீவிரமடைகின்றது. அவர் வயிற்றின் திசுமாதிரியிலும் H. pylori வளர்ந்திருப்பது உறுதிசெய்யப்படுகின்றது.

இவ்வாறு ulcer வாழ்க்கை முறை நோயல்ல; H. pylori எனும் பாக்டீரியா தொற்றால் ஏற்படும் நோய் என்பதை கண்டறிந்த Dr. வாரன் மற்றும் Dr. மார்ஷல் இருவருக்கும் 2005ஆம் ஆண்டு மருத்துவத்திற்காக நோபல் பரிசும் கிடைக்கின்றது.

இந்த கண்டுபிடிப்பினால் இன்று ulcerருக்கான சிகிச்சை முறையாக H. pylori யை அழிக்கும் antibiotic மருந்துகள் உபயோகப்படுத்தப்படுகின்றன. முத்திரை உதவாது மக்களே மாத்திரை தான் உதவும்.

அறிவியல்பேசுவோம் போலிஅறிவியல்தவிர்ப்போம்
போலிஅறிவியல்பகிர்வதைதவிர்ப்போம்.

Visits: 12

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *