Sun. Sep 24th, 2023

தமிழ்நாடு சுற்றுலா துறை (#TNTOURISMOFFCL) உலக வன உயிர் நிதியம் (#WWF-INDIA), வன உயிர்களுக்கான அமைப்பு (#OWL) இணைந்து நடத்தும் வன உயிர் புகைப்பட போட்டி மற்றும் கண்காட்சி.

தலைப்பு : “தமிழ்நாட்டின் பல்லுயிர்கள்”

முக்கிய விதிமுறைகள் :

  1. புகைப்படங்கள் நம் தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதாக இருக்க வேண்டும்.
  2. கடந்த 5 வருடங்களுக்குள் எடுக்கப்பட்ட படங்களாக இருக்க வேண்டும்.
  3. மிருககாட்சி சாலைகளில் அடைக்கப்பட்ட விலங்குகள், பறவைகளின் கூடுகள், கால்நடைகள் , செல்ல பிராணிகள், தமிழ்நாட்டில் காண முடியாத விலங்குகளின் படங்கள் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்.
  4. கொடுக்கப்பட்ட தலைப்புகளை சார்ந்த படங்கள் மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
  5. படங்கள் முற்றிலும் உங்களுடையதாக, நீங்கள் எடுத்தவையாக இருக்க வேண்டும்.
  6. படங்கள் தெளிவாக இருக்க வேண்டும்.
  7. கூகிள் ட்ரைவ்-இல் நீங்கள் எடுத்த வன உயிர்களின் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து அந்த லிங்க் மற்றும் உங்களுடைய தகவல்களை கீழ்காணும் மின் முகவரியில் வரும்
    ஆகஸ்ட் 30 வரை சமர்ப்பிக்கலாம். (கூகிள் ட்ரைவ் லிங்க் public access தர வேண்டும்)
  8. ஒரு மின்னஞ்சல் முகவரியில் செய்யும் பதிவிற்கு 5 படங்கள் வரை சமர்பிக்கலாம்.
  9. ஒருவர் பல மின்னஞ்சல் முகவரியில் இருந்தும் பல பதிவுகள் செய்யலாம்.
  10. படங்களை உண்மை தன்மை மாறாமல் மெருகேற்றலாம் (Basic edits, Panorama Stitches etc). அசல் (original) படங்களும் சமர்ப்பிக்க வேண்டும்.

docs.google.com/forms/d/e/1FAIpQLSdwFUUf73lXMlBrPKhQi3ns-5YEmuOew5P9RzuiZ2ZluFWUSw/viewform

இது வெறும் புகைப்பட போட்டி என்று இல்லாமல் தமிழ்நாட்டில் உள்ள வன உயிர்களை, அவை வாழும் இடங்களை, வன உயிரின பாதுகாப்பில் உள்ள சவால்களை, அதில் பொது மக்களாகிய நமது பங்களிப்பை, நம் மாநிலத்தில் உள்ள சிறந்த புகைப்பட கலைஞர்களை அனைவரும் அறிந்து கொள்ள உதவும் முயற்சி.

எல்லோரும் பங்கேற்கலாம். 18 வயதிற்கு கீழ் உள்ளவர்களின் பதிவுகள் தனி பிரிவாக பரிசீலிக்கபடும்.

தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களுக்கு சிறப்பான பரிசுகள் வழங்கப்படும். போட்டி முடிந்த பிறகு சமர்ப்பிக்கப்பட்ட படங்கள் கண்காட்சியாக வைக்கப்படும்.

Hits: 7

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *