Mon. Oct 2nd, 2023

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி பற்றும் ஊராட்சிதுறை , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, வட்டார இயக்க மேலாண்மை அலகில் காலியாக உள்ள கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த முறையில் பூர்த்தி செய்திட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன .

மேற்படி விண்ணப்பங்கள் மற்றும் இதர விபரங்களை https://madurai.nic.in/notice_category/recruitment/ என்ற இணையதள முகரியிலிருந்து பதிவிறக்கம் மற்றும் இணை இயக்குநர் / திட்ட இயக்குர் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகில் பெற்றுக் கொள்ளலாம் .

விண்ணப்பிக்க விரும்புவோர் 16.08.2022 தேதி மாலை 5.45 மணிக்குள் இனான இயக்குநர் / திட்ட இயக்குநர் , மாவட்ட இயக்க மேலாண்மை அலகு , புது நத்தம் ரோடு , ரிசர்வ் லைன் பஸ் ஸ்டாப் அருகில் , மதுரை முகவரிக்கு விண்ணப்பங்கள் வந்து சேரும் வண்ணம் அனுப்ப வேண்டும் .

வட்டார இயக்க மேயாளர் / வட்டார ஒருங்கிணைப்பாளர் காலிப் பணியிடம் எண்ணிக்கை 10

வட்டார இயக்க மேலாளர் – நியமனத்திற்கான தகுதிகள் :

  1. இளநிலை பட்டப்படிப்புடன் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு ( MS Office ) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும் . கணினி அறிவியல் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் .
  2. அதிக பட்ச வயது 28 க்குள் இருக்க வேண்டும் . சொந்த மாவட்டத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும் .
  3. திட்டம் தொடர்பாள பணிகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டு முன் அனுபவம்

வட்டார ஒருங்கிணைப்பாளர்கள் – நியமனத்திற்கான தகுதிகள் :

  1. பட்டப்படிப்பு மற்றும் கணினி படிப்பில் 6 மாத பட்டையபடிப்பு ( MS Office ) தேர்ச்சி பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும் .
  2. அதிக பட்ச வயது 28 க்குள் இருக்க வேண்டும் . சொந்த வட்டாரத்தில் வசிப்பவராக இருக்க வோண்டும் .
  3. திட்டம் தொடர்பான பணிகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டு முன் அனுபவம்

நிபந்தனைகள் :

  1. நிர்ணயிக்கப்பட்ட நாள் நேரத்திற்கு பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்படமாட்டாது .
  2. மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மூலம் நடைபெறும் எழுத்து தேர்வுக்கு விண்ணப்பதாரர்களுக்கு பதிவஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்படும் .
  3. தேர்ந்தெடுக்கப்படும் தகுதியான நபர்கள் அரசு இனச்சுழற்சி விதிமுறைகளின் படி பணியமர்த்தப்படுவர் .

Hits: 209

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *