Thu. Mar 28th, 2024

மக்களவையில் மின்சார சட்டத்திருத்த மசோதாவை மத்திய மின்துறை அமைச்சர் ஆர்.கே.சிங் இன்று தாக்கல் செய்தார். மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகள், மின்துறை ஊழியர்கள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மின் விநியோகத்தை தனியாருக்கு விடுவது, மின்சார ஒழுங்குமுறை ஆணையங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்க சட்டத்திருத்தம், குறைந்தபட்சம், அதிகபட்ச மின்கட்டணத்தை நிர்ணயிப்பது தொடர்பாகவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.

மானியத்தை கணக்கில் கொள்ளாமல் மின் கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட வேண்டும் என்பது சட்டத்தின் முக்கிய அம்சமாக உள்ளது.

இந்த திட்டத்தினால் 100 யூனிட் இலவச மின்சாரம், நெசவாளர்கள், விவசாயிகளுக்கு தரப்படும் இலவச மின்சாரம் ரத்தாக வாய்ப்புண்டு என கூறப்படுகிறது

Visits: 0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *