கேளோ இந்தியா திட்டத்தில் விளையாட்டரங்குகளின் கட்டமைப்பை மேம்படுத்த மாநிலவாரியாக ஒன்றிய மோடி அரசு நிதி ஒதுக்கியுள்ளது. நிதி ஒதுக்கியுள்ளதில் பாஜக ஆளும் மாநிலத்துக்கு ஒரு மாதிரியாகவும், பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஒரு மாதிரியாகவும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத் – 608 கோடி நிதியும் , உத்திர பிரதேசம் – 503 கோடி நிதியும் ஒதுக்கியுள்ளது, ஆனால் பாஜக ஆளாத மாநிலமான தமிழ்நாட்டுக்கு 33 கோடி
ஒதுக்கி பாரபட்சம் காட்டியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குஜராத்தை விட மிக அதிகமான மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டிற்கு குஜராத்திற்கு ஒதுக்கப்பட்டதை விட 20 மடங்கு குறைவாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
http://164.100.24.220/loksabhaquestions/annex/179/AU2614.pdf
Hits: 18