விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் அறிக்கை ” விலைவாசி உயர்வு தொடர்பான விவாத்த்திற்கு விடையளிக்கும் போது, அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் அவர்கள், இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் நாடுகளை இழிவுசெய்யும் வகையில் ‘ அவர்கள் ஐஎம்எஃப் மற்றும் பிற நாடுகளிடம் கையேந்துகின்றனர் என்று பேசினார்.
இந்தியாவில் வறுமை,வேலை வாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு, பட்டினிச் சேவைகள் போன்றவை மக்களை வாட்டி வதைக்கும் நிலையில், இந்தியா எல்லாவற்றிலும் தன்னிறைவு பெற்றுவிட்டதைப் போல தம்பட்டமடிப்பது நெருடலாக உள்ளது. உலகமே கவனித்துக் கொண்டிருக்கும் மக்களின் அவையில் இவ்வாறு பிறநாடுகளைக் கேலிசெய்வது அரசியல் நாகரிகமா? எனும் கேள்வி எழுகிறது. “
Hits: 15