Thu. Apr 25th, 2024

நாடாளுமன்றத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தமிழக அரசை கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார். அதற்கு பதகலடியாக தமிழ்நாட்டின் நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாக ராஜன் அவர்களின் அறிக்கை  ” 01.08.22 அன்று பாராளுமன்றத்தில் விலைவாசி உயர்வு , சரக்குமற்றும் சேவைகள் வரி உயர்வு , பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரிகள் ஆகியவை குறித்து மாண்புமிகு ஒன்றிய நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் உரையாற்றினார் . இதுகுறித்து நான் சில விளக்கங்களை அளிக்க விரும்புகிறேன் .

பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வரியை ஒன்றிய அரசு குறைத்திருந்தபோதும் மாநில அரசு குறைக்கவில்லை என்று மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்கள் கூறினார்கள் . நவம்பர் 2021 ல் , ஒன்றிய அரசு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான தனது வரிகளை குறைப்பதற்கு முன்பே , தமிழ்நாடு அரசு ஆகஸ்ட் 2021 ல் பெட்ரோல் மீதான வரியில் மூன்று ரூபாய் குறைத்துள்ளது . மேலும் , ஒன்றிய அரசின் வரிகுறைப்பால் பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது . அதாவது , பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 4 ரூபாய் 95 பைசா குறைந்துள்ளது . அதேபோல் டீசல் மீதான மாநில அரசின் வரி 1 ரூபாய் 76 பைசாவாகக் குறைந்துள்ளது . எனவே , தேர்தல் வாக்குறுதியில்பெட்ரோல் மீதான வரி 5 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் , 4 ரூபாய் 95 பைசா குறைக்கப்பட்டுள்ளது . டீசல் மீதான வரி 4 ரூபாய் குறைக்கப்படும் என்று கூறியதில் 1 ரூபாய் 76 னபசா குறைக்கப்பட்டுள்ளது . மேலும் , மாநில அரசு மீன்வளத் துறையிலும் , போக்குவரத்துத் துறையிலும் கூடுதலாக டீசல் மானியம் வழங்கி வருகின்றது .

கடந்த ஏழு ஆண்டுகளாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது ஒன்றிய அரசு தனது வரியை மிக அதிகமாக பலமுறை உயர்த்தி வந்தது . இதனால் , ஒன்றிய அரசிற்கு வருவாய் பல இலட்சம் கோடி ரூபாய் உயர்ந்திருந்தாலும் , அதற்கேற்ப , மாநில அரசுகளின் வருவாய்களில் உயர்வு ஏற்படவில்லை . ஏனென்றால் , மாநில அரசுகளுடன் பகிரக்கூடிய சுவால் வரியைக் குறைத்து , பெட்ரோல் மற்றும் டீசல் மீதான மேல்வரி மற்றும் கூடுதல் கட்டணங்களை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது .

ஒன்றிய அரசு பெட்ரோல் மீதான வரியை 23.42 ரூபாயாகவும் ( 247 % ) , டீசல் மீதான வரியை 28.23 ரூபாயாகவும் ( 790 % ) கடந்த ஏழு ஆண்டுகளில் உயர்த்தி வந்துள்ளது . நவம்பர் 2021 மற்றும் மே 2021 ல் சேர்த்து , பெட்ரோல் மீதான வரியை 13 ரூபாயாகவும் , டீசல் மீதான வரியை 16 ரூபாயாகவும் குறைத்துள்ளது . ஒன்றிய அரசு தனது வரிகளைக் குறைத்துள்ள நிலையிலும் , 2014 ஆம் ஆண்டிலுள்ள வரிகளை ஒப்பிடும்போது , தற்போதுள்ள ஒன்றிய அரசின் வரிகள் பெட்ரோல் மீது லிட்டருக்கு 10.42 ரூபாயும் ( 110 % ) , டீசல் மீது லிட்டருக்கு 12,23 ரூபாயும் ( 342 % ) இன்னும் அதிகமாகவே உள்ளன . ஆகவே , ஒன்றிய அரசு தனது வரிகளை மேலும்குறைக்க வேண்டிய தேவை உள்ளது .

03.11.2021 அன்று ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்ட வரி குறைப்பால் , மாநில அரசிற்கு ஆண்டு ஒன்றிற்கு சுமார் 1,050 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது .

அதேபோல் , மே , 2022 ல் அறிவித்துள்ளவரி குறைப்பால் , மாநில அரசிற்கு மேலும் ஆண்டு ஒன்றிற்கு சுமார் 800 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படும் .

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மீதான சரக்கு மற்றும்சேவைகள் வரி விதிப்பு சாமானிய மக்களைப் பாதிக்கும் என்பதால் , தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வமாக தனது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.இந்த வரி விதிப்பின் முடிவு மூன்று கட்டங்களில் எடுக்கப்பட்டது.மூன்றாவது கட்டம் , அதாவது சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் கூட்டத்தில்தான் வரி விதிப்பிற்கான பரிந்துரைகள் ஒப்புதலுக்குவைக்கப்பட்டது . சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தின் அடிப்படைக்கட்டமைப்பில் பல்வேறு சிக்கல்கள் உள்ளன . இதில் ஒன்றிய அரசிற்கு 33 சதவீத வாக்கும் . மற்ற அனைத்து மாநிலங்களுக்கும் தலா இரண்டு சதவீத வாக்கும் உள்ளது . பெரிய மாநிலமோ அல்லது சிறிய மாநிலமோ , ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு சதவீத வாக்கு மட்டுமே . இவ்வாறுஉள்ள கட்டமைப்பில் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பின் பரிந்துரையைதடுக்க வேண்டுமென்றால் ஏறத்தாழ 25 மாநிலங்களின் ஒருமித்த ஆதரவு வேண்டும் . அல்லது ஒன்றிய அரசின் ஆதரவு வேண்டும் .

மேலும் , இந்த அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் அனைத்தையும்ஏற்றுக்கொள்ள வேண்டும் அல்லது அனைத்தையும் நிராகரிக்க வேண்டும் என்ற முடிவு சரக்கு மற்றும் சேவைகள் வரி மன்றத்தில் முன்வைக்கப்பட்டது . விவாதத்திற்குப் பின் , மாண்புமிகு அமைச்சர்கள் குழுவின் இடைக்கால அறிக்கையில் இருந்த 56 பரிந்துரைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது . வரிவிதிப்பு குறித்து மூன்று கட்டங்களில் இவ்வாறு முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதை மாண்புமிகு ஒன்றிய நிதியமைச்சர் அவர்களே குறிப்பிட்டுள்ளார்கள் .

தேசிய அளவில் மக்கள்தொகையில் தமிழ்நாட்டின் பங்கு 6.21 சதவீதம் மற்றும் மொத்த உற்பத்தி மதிப்பில் 9.16 சதவீதம் . ஆனால் , ஒன்றிய வரிகளில் இருந்து நமக்குப் பகிர்ந்தளிக்கப்படுவதோ வெறும் 4.079 சதவீதம் மட்டுமே . தொடர்ந்து வந்த நிதிக் குழுக்களால் தமிழ்நாட்டிற்கு நிதிப் பங்கிட்டில் நியாயம் வழங்கப்படவில்லை , உரிய பங்கு தொடர்ந்து குறைந்து வந்துள்ளது .

சரக்கு மற்றும் சேவை வரிகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின் , மாநிலங்களுக்கு வரி விதிப்பதில் அதிகாரம் பெருமளவில் குறைந்துள்ளது. மாநிலங்கள் தங்களது வருவாயைப் பெருக்குவதற்கு போதிய வாய்ப்புகள் இல்லை . எனவே , சாமானிய மக்களுக்கு உதவுவதற்கு ஒன்றிய அரசுக்குத்தான் வாய்ப்புகளும் , வசதிகளும் உள்ளது . அதைப் பயன்படுத்தி , ஒன்றிய அரசு வரிச்சுமையைக் குறைக்க முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . “

Visits: 6

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *