Thu. Oct 6th, 2022

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் டைரக்டர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் ” விக்ரம் ” . இந்தப்படத்தை வெளியிட்டது உதயநிதியின் ரெட்ஜெயன்ட் மூவிஸ். விக்ரம் படம் வரலாறு காணாத வெற்றியை பெற்று இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

15 வருடம் நிறைவடைந்ததை அடுத்து ரெட்ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் விழா கொண்டாடியது. இதில் கமல்ஹாசன், அமீர்கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

நடிகர் கமல்ஹாசன் விழாவில் கலந்து கொண்டு தன்னுடைய சொந்த நிறுவன தயாரிப்பில் நடிகர் உதயநிதி நடிக்க உள்ள தகவலை பகிர்ந்துகொண்டார். இன்னும் இயக்குனர் யார் என்று முடிவு செய்யப்படவில்லை.

Hits: 3

Leave a Reply

Your email address will not be published.