பத்திரிக்கையாளர் நெல்சன் சேவியர் அவர்கள் டிவிட்டரில் டிவிட் செய்த செய்தி ” நாடு, மொழி, கட்சி, கொள்கைகள் பற்றி, சுயமரியாதை-சமூகநீதி பற்றி 80 ஆண்டு காலம் பேசி எழுதிவந்த கலைஞர் மாதிரியான ஒரு உலகத்தலைவரை காட்டுங்கள். தமிழ்நாட்டின் இருநூறாண்டு வரலாறு அவர் வாழ்க்கையில் இருக்கிறது. அவரை அங்கீகரிக்கிற விசயங்களில் மட்டும் ஒரு ஒவ்வாமை திடீர் திடீரென்று எழும்.
விமானநிலையம்-பல்கலைக்கழகம் என உருவாக்கிய அனைத்துக்கும் அண்ணா பெயரை வைத்து அங்கீகரித்து மகிழ்ந்தவர் கலைஞர். எந்த சமரசமும் அவரதில் செய்துகொள்ளவில்லை. அடையாளங்களில் பெரியார், அண்ணாவிற்கு எதையெல்லால் கலைஞர் செய்தாரோ அதைவிட பலமடங்கு தமிழ்நாடு அரசு கலைஞருக்கு செய்ய வேண்டும்.
பிரமாண்ட அனுமார் சிலைகளை பிரதமர் திறந்துவைக்கிற நாட்டில், நவீன தமிழ்நாட்டை கட்டமைத்த பேனாவை மாநில அரசு நிர்மாணிப்பதில் ஒரு தவறும் இல்லை. தடைகளை தகர்த்து கல்வி கற்ற ஒரு தலைமுறையின் அடையாளமாக இருக்கப் போகிறது இந்த பேனா.
பெரியார் – அண்ணா -கலைஞர் தமிழ்நாட்டின் தகர்க்க முடியாத அரசியல் ஆயுதங்கள். இந்த ஆயுதங்களை முன்னிறுத்தும் போதும், வரலாற்றில் அதை நிலைநிறுத்த முற்படும் போதெல்லாம், சுடப்பட்டது போன்ற முனகல் பல தரப்பிடமிருந்து வந்து கொண்டே இருக்கும்.
ஏனெனில் அந்த பேனா தீட்டிய நெருப்பு அப்படி.
~ ஏகலைவனின் கட்டை விரலோ தலையோ
காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும். “
Hits: 8