Fri. Mar 29th, 2024

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் வெளியிட்ட அறிக்கை ” அக்னிபாத் இளைஞர்களின் எதிர்காலம் எப்படி இருக்கும் என்பதை தெரிந்து கொள்ள இப்போதைய இராணுவ வீரர்களின் நிகழ் காலம் பற்றி அறிந்து கொள்வோம் என்று நாடாளுமன்றத்தில் ஒரு கேள்வியை எழுப்பி இருந்தேன் .

முன்னாள் இராணுவத்தினருக்கு மறு வேலை வாய்ப்பிற்கு எவ்வளவு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது , அப் பணியிடங்களில் மறு வேலை வாய்ப்பு பெற்ற முன்னாள் இராணுவத்தினர் எவ்வளவு சதவீதம் உள்ளனர் ? என்பதே என் கேள்வி . ( நட்சத்திரக் குறியிடப்படாத கேள்வி எண் : 1149 ஜூலை 22 , 2022 )

அதற்கு பதில் அளித்த பாதுகாப்பு இணைய அமைச்சர் அஜய் பட் தந்துள்ள தகவல் அதிர்ச்சி அளிக்கிறது .

முன்னாள் இராணுவத்தினருக்கு

  • மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் ( CCS & P ) , மத்திய ஆயுதப் படை ( CAPFs ) , ( 10 சதவீதம் குரூப் ” சி ” – 10 சதவீதம் , குரூப் டி – 20 சதவீதம் ,
  • மத்திய ஆயுதப் படையில் அசிஸ்டென்ட் கமாண்டன்ட் பதவி வரையிலான நேரடி நியமனங்களில் 10 சதவீதம் . * மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் ( CPSUs ) , பொதுத் துறை வங்கிகள் ( PSBs ) குரூப் சி -14.5 சதவீதம் , குரூப் டி – 24.5 சதவீதம்
  • பாதுகாப்பு காவல் கார்ப்ஸ் ( DSC ) – 100 சதவீதம் என்ற அளவில் இட ஒதுக்கீடு வழங்கப்படுகின்றன .

இதனடிப்படையில் பணி நியமனங்கள் பெற்றவர்கள்
2014- 2322
2015-10982
2016-9086
2017-5638
2018- 4175
2019-2968
2020-2584
2021-2983

2015 , 2016 இரண்டு ஆண்டுகளில் முன்னாள் இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள வேலை வாய்ப்புகளின் எண்ணிக்கையோடு 2017-2021 ஐந்தாண்டுகளின் விவரங்களை ஒப்பிடும் போது பெரும் சரிவு இருக்கிறது . 2015 இல் 10000 ஐ தாண்டி இருந்த வேலை வாய்ப்புகள் 2019 – 2021 க்கு இடைப்பட்ட மூன்று ஆண்டுகளில் தலா 3000 ஐ கூட கடக்கவில்லை .

சில நேரம் எண்ணிக்கை கூட சரியான சித்திரத்தை தராது . ஆகவே அரசு நிர்ணயித்துள்ள இட ஒதுக்கீடு சதவீதம் எவ்வளவு நிரப்பப்பட்டுள்ளது என்று பார்த்தால் அந்த தகவல்கள் அதிர்ச்சியின் உச்சமாக உள்ளன .

இது 30.06.2021 இல் உள்ள நிலைமை .
முன்னாள் இராணுவத்தினர் சதவீதம் இதுதான் .
1 மத்திய சிவில் சேவைகள் & அஞ்சல் ( CCS & P ) குரூப் சி -1.39 சதவீதம் , குரூப் டி- 2.77 .
2 மத்திய பொதுத் துறை நிறுவனங்கள் ( CPSUs ) , குரூப் சி – 1.14 சதவீதம் , குரூப் டி 0.37 சதவீதம்
3 பொதுத் துறை வங்கிகள் ( PSBs ) குரூப்சி -9.10 குரூப் -21.34
4 மத்திய ஆயுதப் படை ( CAPFs ) குரூப் ” ஏ ” 2.20
குரூப் ” பி ” 0.87
குரூப் ” சி ” 0.47
குரூப் ” டி ” 0.00 அரசு வங்கிகள் தவிர மற்ற இடங்களில் எல்லாம் அதிக பட்ச சதவீதம் 3 சதவீதத்தை தாண்டவே இல்லை . ஒரு சதவீதத்திற்கும் கீழே இருக்கிற இடங்கள் உள்ளன . ஜீரோ சதவீதம் கூட உள்ளது .

ஏற்கெனவே உள்ள முன்னாள் இராணுவத்தினர் நிலைமையே இதுதான் . மறு வேலை வாய்ப்பு இல்லை . வேலை கிடைத்தால் இருந்திருக்கக் கூடிய இராணுவப் பணியின் கடைசி ஊதியம் புதிய பணி நியமனத்தில் பாதுகாக்கப்படுவது என்ற நடைமுறைக்கும் இடம் இல்லை .

20 ஆண்டு இராணுவப்பணி முடித்து வந்தவர்களின் நிகழ் கால கதியே இதுவெனில் நான்காண்டு ஒப்பந்த அக்னி வீரர்கள் எதிர்காலம்தான் என்ன ? “

Visits: 18

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *